இலங்கை

வாகன உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி – TIN இலக்கம் கட்டாயம்!

இலங்கையில் வாகனங்களைப் பதிவு செய்யும் போதும் அல்லது வாகன உரிமையை மாற்றும் போதும் வரி செலுத்துவோர் தமது TIN இலக்கத்தை சமர்ப்பிப்பது ஜனவரி 5 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

புதிய வாகனப் பதிவு மற்றும் ஏற்கனவே உள்ள வாகனங்களின் உரிமை மாற்றங்கள் ஆகிய இரண்டிற்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

 

 

புதிய உரிமையாளர் தனது தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கம் அல்லது வணிகப் பதிவு (Business Registration) இலக்கத்துடன் சேர்த்து, தனது TIN இலக்கத்தையும் திணைக்களத்தின் முறைமையில் உள்ளீடு செய்வது அவசியமாகும்.

 

நாட்டின் வரி வருமானத்தை முறைப்படுத்துதல் மற்றும் வரி வலையமைப்பை விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

இருப்பினும் உந்துருளிகள், கை உழவு இயந்திரங்கள், உழவு இயந்திரம் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு இந்தத் தேவை பொருந்தாது என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button