உலகம்

கரீபியன் கடலில் அமெரிக்காவின் அதிரடி- வெனிசுவேலா எண்ணெய் கப்பல் சுற்றிவளைப்பு!

வெனிசுவேலாவின் எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த வொஷிங்டன் தொடர்ந்து முயற்சித்து வரும்நிலையில், கரீபியன் கடலில் அமெரிக்கப்படைகள் மற்றொரு எரிபொருள் கப்பலைக் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையுடன் ஒருங்கிணைந்து கடற்படையினர், ஒலினா என்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒலினா என்ற இந்தக் கப்பல் தடை செய்யப்பட்ட எண்ணெய்யை எடுத்துச் சென்றதாக சந்தேகிக்கப்பட்டே கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் கைப்பற்றலின்போது உலங்கு வானூர்தியில் இருந்து குறித்த கப்பலுக்குள் அமெரிக்கத் துருப்புக்கள் இறங்குவதைக் காட்டும் காணொளி வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இதன்படி, அண்மைய வாரங்களில் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட வெனிசுவேலாவின் ஐந்தாவது கப்பல் இதுவாகும்.
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button