இலங்கை

மாகாண சபைத் தேர்தல் முறைமை குறித்து ஆராய தெரிவுக்குழு – சபையில் தீர்மானம் சமர்ப்பிப்பு

மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய தேர்தல் முறைமையைத் தெரிவு செய்வது குறித்து ஆராய்வது தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கான தீர்மானம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் இந்தத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

அதற்கமைய, மாகாண சபைத் தேர்தல்களை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்த வேண்டும் என்பது குறித்து இந்தத் தெரிவுக்குழு ஆராயவுள்ளது.

அதன்பின்னர், இது தொடர்பான தனது முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அந்த குழுவுக்கு பணிக்கப்படும்.

இந்தத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button