உலகம்

வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தை அமெரிக்கா கையாளுமா? ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் அமெரிக்காவின் அதிரடி இராணுவ நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் எண்ணெய் துறையில் அமெரிக்கா “மிகத் தீவிரமாக ஈடுபடும்” என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 
இது குறித்து ஃபொக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த அவர், “உலகிலேயே மிகப்பெரிய மற்றும் மிகச்சிறந்த எண்ணெய் நிறுவனங்கள் எம்மிடமே உள்ளன.

எனவே, வெனிசுவேலாவின் எண்ணெய் விவகாரங்களில் நாங்கள் இனி மிகத் தீவிரமாக ஈடுபடப் போகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய மசகு எண்ணெய் இருப்பைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றான வெனிசுவேலாவில், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதன் பின்னர் அதன் இயற்கை வளங்களை அமெரிக்க நிறுவனங்கள் ஊடாகக் கையாளப் போவதை ட்ரம்பின் இந்த அறிவிப்பு உறுதிப்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு நாட்டின் தலைவரைக் கைது செய்த பின், அந்த நாட்டின் பிரதான வளத்தை இலக்கு வைத்து அமெரிக்க ஜனாதிபதி பேசியிருப்பது சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையை ரஷ்ய ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்கள் கண்டித்துள்ளனர்

ஒரு நாட்டின் இறையாண்மையில் அமெரிக்கா தலையிடுவது ஆபத்தான முன்னுதாரணம் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button