
வாழ்க்கைச் செலவு உயர்வை எதிர்த்து ஈரானில் போராட்டங்கள் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கின்றன.
காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதல்களில் இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நாட்டின் பாதுகாப்புப் படையினரால் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டக்காரர்கள் அரச சொத்துக்களுக்கு தீ வைத்து சேதப்படுத்தியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





