
சுவிட்ஸர்லாந்தில் ஸ்கை ரிசார்ட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இந்த சம்பவத்தில் 115 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு சுவிட்சர்லாந்தில் கிரான்ஸ்-மொன்டானாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நள்ளிரவு 01:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இதன்போது ரிசாட்டில் 400 பேர் வரையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை விசாரித்த அதிகாரிகள் எந்த காரணத்தையும் உறுதிப்படுத்தவில்லை, எனினும், தாக்குதலை திட்டவட்டமாக நிராகரித்துள்ளனர்.
பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் உயிரிழந்தவர்களை அடையாளம் கண்டு, உடல்களை விரைவாக உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிராந்திய காவல்துறைத் தளபதி ஃபிரடெரிக் கிஸ்லர் தெரிவித்துள்ளார்.
தீ விபத்து நடந்த இடத்திற்கு பதின்மூன்று ஹெலிகாப்டர்கள், 42 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 150 அவசரகால உதவியாளர்கள் இரவோடு இரவாக அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த வெடிப்பு சம்பவம் பலமாக இருந்தமையால் பலர் நச்சுப் புகையை சுவாசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கையோ அல்லது அவர்களின் தேசிய இனங்களோ இதுவரை தெரியவில்லை.
சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்





