இலங்கை

நீதிமன்றை விட்டு வெளியேறிய ரணில்! விடுக்கப்பட்ட உத்தரவு

புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு ஜனவரி 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் நிகழ்வில், அரசு பணத்தை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு ஒத்திவைப்பை தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தை விட்டு வெளியேறி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் நிகழ்வில், அரசு பணத்தை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பிலான விசாரணை தொடர்பில் அவர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஒகஸ்ட் 22 முதல் 26 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button