விளையாட்டு

ஆசிய கிண்ண தொடர்: இந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்

ஆசியக் கிண்ண T20 கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 4 சுற்​றின் கடைசி போட்டியில் இரவு இந்தியா – இலங்கை (Sri Lanka) அணி​கள் டுபா​யில் மோதுகின்​றன.

ஆசியக் கிண்ண T20 கிரிக்​கெட் தொடர் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் நடை​பெற்று வரு​கிறது.

8 அணிகள் கலந்து கொண்​டுள்ள இந்த தொடர் இறுதிக்​கட்​டத்தை நெருங்கி உள்​ளது.

இறு​திப் போட்​டிக்கு தகுதி
சூப்​பர் 4 சுற்றில் முதல் இரு போட்டிகளி​லும் வெற்றி பெற்ற சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி இறு​திப் போட்​டிக்கு தகுதி பெற்று விட்​டது

இந்​நிலை​யில் சூப்​பர் 4 சுற்​றின் கடைசி ஆட்​டத்​தில் இந்​திய அணி இன்று இலங்​கை​யுடன் மோதுகிறது.

இந்த ஆட்​டம் இரவு 8 மணிக்கு துபா​யில் நடை​பெறுகிறது. சரித் அசலங்கா தலை​மையி​லான இலங்கை அணி 2 ஆட்​டங்​களில் தோல்வி அடைந்து இறு​திப் போட்​டிக்கு முன்​னேறும் வாய்ப்பை இழந்​து​ விட்​டது.

இந்திய அணிக்கு இன்றைய ஆட்டம் நாளை மறுதினம் 28ஆம் நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கான சிறந்த பயிற்சியாக அமையக்கூடும் கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button