தமிழீழம்

கிருசாந்தியின் 29 ஆவது ஆண்டு நினைவேந்தலும், “வாசலிலே கிருசாந்தி” நூல் வெளியீடும்!

யாழ்.செம்மணியில் இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(07) இடம்பெற்றது.

வடக்கு, கிழக்கு நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு செம்மணி சந்தியில இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் மைத்துனன் சந்திரகாந்தன் மயூரன் மற்றும் உறவினர்கள் இந்த நினைவேந்தல் நிகழ்வில்
கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது “வாசலிலே கிருசாந்தி” எனும் கவிதை நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்த நினைவேந்தலில் தமிழரசு கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஸ், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button