இலங்கை

செம்மணி விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் தமிழ் கட்சிகள் அவசரமாக கூடுகின்றன.

யாழ்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் சந்திபொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஒன்று கூடல் யாழ்ப்பாணத்தில் இன்று (25) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் கூட்டாகவும், அதேநேரம் தனித்தனியாகவும் பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளதுடன் பல்வேறு தீர்மானங்களையும் எடுத்திருக்கின்றன.

தமிழ்க் கட்சிகள்

இந்தநிலையில், யாழ். நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று (25) காலை தமிழ்க் கட்சிகள் பலவும் மீண்டும் ஒன்றுகூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஏற்பாட்டில் அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் இணைத் தலைவர்களும் அதேபோன்று ஏனைய சில கட்சிகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தச் சந்திப்பின் முடிவில் தமிழ்க் கட்சிகள் இணைந்து இன்று (25) மதியம் விசேட ஊடக சந்திப்பொன்றையும் நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button