இலங்கை

ஆயுதப் போருக்கு முடிவு கட்டிய மஹிந்தவை தமிழ் டயஸ்போராக்கள் பழிவாங்கக் கூடுமாம்.!

“இலங்கையில் ஆயுதப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஷ மீது தமிழ் டயஸ்போராக்கள் சிலர் இன்னமும் வைராக்கியத்துடனேயே உள்ளனர். இதனால் அவரைப் பழிவாங்க முற்படக்கூடும். எனவே, அவர் உட்பட முன்னாள் ஜனாதிபதிகளுக்குப் பாதுகாப்பு அவசியம்.” – இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான முன்னாள் எம்.பி. சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“ஜனாதிபதி பதவியை வகிப்பவர் துணிவுடன் முடிவுகளை எடுக்க வேண்டும். அதற்குரிய சுதந்திரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. உலக நாடுகளிலும் இந்த நடைமுறை உள்ளது. எனவே, ஜனாதிபதியால் எடுக்கப்படும் முடிவு 90 வீதமானோருக்குச் சாதகமாக இருக்கலாம். 10 வீதமானோர் அதனை எதிர்க்கலாம்.

எனவே, அந்த 10 சதவீதமானோர், ஜனாதிபதி ஓய்வுபெற்ற பின்னர் அவரைப் பழிவாங்க முற்படக்கூடும். அதனால்தான் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு உள்ளிட்ட வரப்பிரதாசங்கள் வழங்கப்படுகின்றன. இது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும்.

குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷ போரை முடிவுக்குக் கொண்டு வந்த தலைவர். அவரைப் பழிவாங்கும் நோக்கில் சில தமிழ் டயஸ்போராக்கள் செயற்படலாம். உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் வைத்து மஹிந்தவைப் பழிவாங்கக்கூடும். ஆகவே, மஹிந்தவுக்குப் பாதுகாப்பு அவசியம். வரப்பிரசாதங்களில் ஒன்றுதான் பாதுகாப்பாகும்.” – என்றார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button