இந்தியா

கனடா தூதுவரை வெளியேற்றியது இந்தியா.

இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தில் பணியாற்றியமூத்த கனேடிய இராஜதந்திரி ஒருவரை நாட்டைவிட்டுஉடனடியாக வெளியேறுமாறு இந்தியா பணித்துள்ளது.

இந்தியாவுக்கான கனடா தூதுவரை இன்று அழைத்தஇந்திய அரசு இந்த தகவலை அவரிடம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் உள்விவகாரங்களில் அவர்தலையிடுவதாகவும், இந்தியாவுக்கு எதிரானசெயற்பாடுகளை அவர் ஊக்குவிப்பதாகவும் இந்தியாஅவர் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

காலிஸ்தான் குழுவினரின் செயற்பாடுகள் கனடாவில்அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஜுன் மாதம்காலிஸ்தான் அமைப்பின் செயற்பாட்டாளர் ஒருவர்கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா பகுதியில் வைத்துசுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்த கொலையைஇந்தியாவே செய்ததாக கனேடிய பிரதமர் கடந்ததிங்கட்கிழமை (18) குற்றம் சுமத்தியிருந்தது இங்குகுறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து கனடா தூதரகத்தில் பணியாற்றியஇந்திய இராஜதந்திரியான பவன்குமார் ராஜ் கனடாவை விட்டு வெளியேற்றப்பட்டிருந்தார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button