தமிழீழம்தமிழ் நாடு

இலங்கையைச் சேர்ந்த மேலும் 8 பேர் தமிழகத்தில் தஞ்சம்.

இலங்கையைச் சேர்ந்த மேலும் 8 பேர் இன்று சனிக்கிழமை (15) தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு ஆண், இரண்டு பெண்கள், குழந்தைகள் என இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் யாழ்ப்பாணம் கடற்கரையில் இருந்து புகலிடம் தேடி அகதிகளாக நேற்றிரவு  பைபர் படகில் புறப்பட்டு இன்றைய தினம் அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனையை சென்றடைந்தனர்.

தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் காவல்துறையினர் இலங்கை தமிழர்களை மீட்டு ராமேஸ்வரம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து, பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்குப் பிறகு 8 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இதுவரை பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்துக்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 265ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button