சுவிஸின் வோ மாநிலத்தில் (Vaud) அரசு ஊழியர்கள் நவம்பர் 20, 24 ஆகிய இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் செய்யப் போகிறார்கள். 2027-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் செலவுகளைக் குறைப்பதை எதிர்த்து இந்தப் போராட்டம்.
வியாழக்கிழமை மாலை ஊழியர்கள் பொதுக்கூட்டம் நடத்தினார்கள். அங்கே வேலைநிறுத்தம் செய்ய வாக்களித்தார்கள். அரசு ஊழியர்களும், அரசு உதவியுடன் இயங்கும் துறைகளில் வேலை செய்பவர்களும் இதில் அடங்குவர். நவம்பர் 26-ஆம் தேதி மீண்டும் கூடிப் பேசுவார்கள்.
தொழிற்சங்கங்களுக்கும் மாநில அரசுக்கும் (Conseil d’État) இடையே நடந்த சமரசப் பேச்சு தோல்வியில் முடிந்தது. அதனால்தான் இந்த முடிவு. பட்ஜெட்டில் சுமார் 65 மில்லியன் பிராங்க் சேமிக்க அரசு திட்டமிடுகிறது. வரிக் குறைப்பால் வரும் இழப்பை ஈடுகட்டவும் பணம் தேவைப்படுகிறது. இதை ஊழியர்கள் ஏற்கவில்லை.
வேலைநிறுத்தம் சட்டப்படி தவறு என்று மாநில அரசு சொல்கிறது. ஊழியர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என்றும் கேட்டிருக்கிறது. ஆனால் இப்போதைக்கு யார்மீதும் நடவடிக்கை எடுக்கும் எண்ணம் இல்லை என்றும் சொல்கிறது.
சங்கங்கள் இதை ஏற்கவில்லை. அரசு மிரட்டுகிறது என்கிறார்கள். மாநிலத்தின் சேமிப்புப் பணத்தை எடுத்துப் பயன்படுத்துங்கள், மக்களுக்கான சேவைகளைக் குறைக்காதீர்கள் என்று கேட்கிறார்கள். நவம்பர் 4-ஆம் தேதி 2027-இல் சம்பள உயர்வு வழங்குவதாக அரசு அறிவித்தது. இதை முதல் வெற்றி என்று சங்கங்கள் சொல்கின்றன. நவம்பர் 5-ஆம் தேதி நடந்த முதல் பேரணியிலும் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
மூலம்: Le Matin
புகைப்படம்: Mika Baumeister / Unsplash





