சுவிஸ் கிரௌபண்டன் மாநிலத்தில் (Graubünden) உள்ள பிரியன்ஸ் (Brienz) கிராமம், இன்னும் குறைந்தது 10 ஆண்டுகளுக்கு “சிவப்பு மண்டலத்தில்” இருக்கும். மாநில இயற்கை அபாயங்கள் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை இதைச் சொல்கிறது.
சிவப்பு மண்டலம் என்றால் ஆபத்து அதிகமான பகுதி. இங்கே புதிய கட்டடங்கள் கட்டவே முடியாது. ஏற்கனவே உள்ள வீடுகளில் பழுதுபார்ப்பு வேலை மட்டும் செய்யலாம். இந்தக் கிராமம் அல்புலா நகராட்சியின் (Albula) ஒரு பகுதி. 2017 முதலே இங்கே இந்த விதி அமலில் உள்ளது.
கிராமத்துக்கு மேலே உள்ள மலையிலிருந்து பெரிய மண்சரிவோ பாறைச் சரிவோ வராது என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதனால்தான் இந்தத் தடை நீடிக்கிறது.
மலைக்குள் இருக்கும் தண்ணீரை வெளியேற்ற, 2024 ஏப்ரலிலிருந்து ஒரு சுரங்கப்பாதை தோண்டப்பட்டது. அந்த வேலை கடந்த மாதம் முடிந்தது. செலவு சுமார் 40 மில்லியன் பிராங்க். இதனால் கிராமம் கீழே சரியும் வேகம் இப்போது ஆண்டுக்கு 5 சென்டிமீட்டராகக் குறைந்துள்ளது என்று புவியியலாளர் ரேட்டோ தோனி (Reto Thöny) சொல்கிறார். மீதமுள்ள துளையிடும் வேலைகள் அடுத்த கோடையில் முடியும்.
2023 வசந்தத்தில் மக்கள் முதல்முறை வெளியேற்றப்பட்டனர். அதே கோடையில் திரும்பினார்கள். ஒரு வருடம் கழித்து மீண்டும் வெளியேற வேண்டியிருந்தது. இந்த ஆண்டு ஜனவரியில்தான் அந்த உத்தரவு நீக்கப்பட்டது. மலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. சில வாரங்களிலேயே நிலைமை மாறக்கூடும்.
மூலம்: RSI
புகைப்படம்: Xavier von Erlach / Unsplash





