சுவிஸ்

உவ்ரியே கூப் கடையில் ஏடிஎம் இயந்திரம் வெடிவைத்துத் தகர்ப்பு

வலே மாநிலத்தில் (Valais) உள்ள உவ்ரியே (Uvrier) ஊரில், கூப் (Coop) கடையில் இருந்த பணம் எடுக்கும் இயந்திரம் (Bancomat) நேற்றிரவு வெடிவைத்துத் தகர்க்கப்பட்டது.

அதிகாலை 3.30 மணிக்குப் பிறகு பலத்த வெடிச் சத்தங்கள் கேட்டன. உவ்ரியே சென்ட்ரில் உள்ள கூப் கடையின் இயந்திரத்தைத்தான் கொள்ளையர்கள் குறிவைத்திருக்கிறார்கள்.

வலே மாநில பொலிஸ் உடனே வந்தது. வெடிபொருள் நிபுணர்களும் இடத்தில் இருக்கிறார்கள். பொலிஸ் நடவடிக்கை இன்னும் தொடர்கிறது.

கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டதாகத் தெரிகிறது. அவர்கள் பணத்தை எடுத்துச் சென்றார்களா என்பது இன்னும் தெரியவில்லை.

வலே மாநில பொலிஸ் இன்று பகலுக்குள் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மூலம்: Le Matin
புகைப்படம்: POURIA 🦋 / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button