சுவிஸ்

மருத்துவ நுழைவுத் தேர்வு: தீசீனோ மாணவர்கள் உருவாக்கிய இத்தாலிய மொழிப் பயிற்சி நூல்

சுவிஸில் மருத்துவம் படிக்க நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். தீசீனோ மாநிலத்தைச் (Ticino) சேர்ந்த இரண்டு மருத்துவ மாணவர்கள், இத்தாலிய மொழியில் முதல் முறையாகப் பயிற்சி நூல் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

லூக்கா பெர்னாஷினா (Luca Bernaschina), பிரான்செஸ்கோ தோட்சியோ (Francesco Dozio) இருவரும் மருத்துவப் படிப்பில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள். தேர்வு இத்தாலிய மொழியிலும் நடக்கும். ஆனால் பயிற்சிப் புத்தகங்கள் இதுவரை பிரெஞ்சு அல்லது ஜெர்மன் மொழியில் மட்டுமே கிடைத்தன. அவற்றை மொழிபெயர்க்கவே மாணவர்கள் ஒன்றிரண்டு மாதங்களைச் செலவழிக்க வேண்டியிருந்தது. மொழிபெயர்த்தால் தவறான பதில் தேர்வுகளின் தந்திரம் மாறிவிடுகிறது, அதனால் பயிற்சியும் பயனில்லாமல் போகிறது.

இந்தத் தேர்வில் இடம் கிடைப்பது கடினம். 10 பேரில் 4 பேருக்குத்தான் இடம் கிடைக்கிறது. இது பள்ளித் தேர்வு மாதிரி இல்லை. திறமையைச் சோதிக்கும் தேர்வு. நேரம் குறைவு, நான்கரை மணி நேரம் தொடர்ந்து எழுத வேண்டும். பள்ளியில் இதற்குத் தயார்படுத்துவதும் இல்லை.

அதனால் இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 3200 பயிற்சிகளை இத்தாலிய மொழியிலேயே எழுதி, படங்களும் வரைந்துள்ளனர். நினைவாற்றல் சோதனைகளும், பொருட்களை முப்பரிமாணத்தில் கற்பனை செய்யும் பயிற்சிகளும் இதில் உள்ளன. இவை பின்னர் உடற்கூறியல் படிப்புக்கும் உதவும்.

இந்தத் தேர்வு நல்ல மாணவரைக் காட்டலாம், ஆனால் நல்ல மருத்துவரைக் காட்டாது என்கிறார் பெர்னாஷினா. நோயாளியின் மேல் அக்கறையும், நன்றாகப் பேசிப் புரிய வைக்கும் திறனும் இந்தத் தேர்வில் சோதிக்கப்படுவதில்லை என்பது அவர் கருத்து.


மூலம்: RSI
புகைப்படம்: Lucia Navarrete / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button