சுவிஸ்

பிரிந்த பெற்றோர்: பிள்ளை இருவரிடமும் வாழ்கிறதா? சுவிஸ் உச்ச நீதிமன்றத்தின் புதிய விதி

பெற்றோர் பிரிந்த பிறகு, பிள்ளை இரண்டு பேரிடமும் மாறி மாறி வாழ்கிறது என்று சட்டம் எப்போது ஏற்கும் என்பதை சுவிஸ் உச்ச நீதிமன்றம் (Bundesgericht) தெளிவாக்கியுள்ளது. ஒரு தந்தை தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வந்தது.

இப்போது பல பிள்ளைகள் பிரிந்த பெற்றோரிடம் மாறி மாறி இருக்கிறார்கள். இதில் பணப் பிரச்சினையும் இருக்கிறது. பிள்ளை ஒருவரிடம் மட்டும் வாழ்ந்தால், மற்றவர் செலவுப் பணம் முழுவதையும் கொடுக்க வேண்டும். இரண்டு பேரிடமும் வாழ்ந்தால், இருவரும் பகிர்ந்து கொடுப்பார்கள். அதனால் சிலர் குறைவாகப் பார்த்துக்கொண்டாலும் “பகிர்ந்த பராமரிப்பு” கேட்கிறார்கள்.

இந்த வழக்கில், பிரிந்த பிறகு தாய் மகனுடன் ஆஸ்திரியாவுக்குப் போய்விட்டார். தந்தை இரண்டு வாரத்துக்கு ஒரு முறை வார இறுதியிலும், வருடத்தில் ஒன்பது வாரம் விடுமுறையிலும் மகனைப் பார்த்துக்கொள்கிறார். இதுவும் பகிர்ந்த பராமரிப்புதான், அதனால் தான் குறைவாகக் கொடுப்பேன் என்று அவர் வாதிட்டார்.

நீதிமன்றம் இதை ஏற்கவில்லை. ஒரு நாளை காலை, மதியம், இரவு என மூன்றாகப் பிரித்தது. மூன்றுக்கும் சம மதிப்பு. ஒவ்வொரு பெற்றோரும் குறைந்தது 10-ல் 3 பங்கு நேரம் பிள்ளையைப் பார்த்துக்கொண்டால்தான் அது பகிர்ந்த பராமரிப்பு. இந்தத் தந்தையின் நேரம் அதைவிட மிகக் குறைவு. விடுமுறை வாரங்களை நீதிமன்றம் கணக்கில் எடுக்கவில்லை. பிள்ளை அன்றாடம் வாழும் வீடுதான் முக்கியம் என்கிறது. அதனால் தந்தை மகனுக்கான செலவுப் பணம் முழுவதையும் கொடுக்க வேண்டும்.

சுவிஸ்ஸில் ஒவ்வொரு ஆண்டும் 20,000 முதல் 30,000 பிள்ளைகள் பெற்றோரின் பிரிவைச் சந்திக்கிறார்கள். அதனால் இந்தத் தீர்ப்பு பல குடும்பங்களைப் பாதிக்கும்.


மூலம்: SRF
புகைப்படம்: Mike Scheid / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button