சுவிஸில் எந்த வேலையும் ஆண்களுக்கு மட்டும் அல்லது பெண்களுக்கு மட்டும் என்று கிடையாது. ஆனால் வோ மாநிலத்தில் (Vaud) இளையவர்கள் தேர்ந்தெடுக்கும் தொழிற்பயிற்சிகளைப் பார்த்தால், இன்னும் பெரிய வித்தியாசம் தெரிகிறது.
2024-ல் வோ மாநிலத்தில் நோயாளிப் பராமரிப்பு, சுகாதாரம், சமூகசேவை பயிற்சிகளில் 10 பேரில் கிட்டத்தட்ட 8 பேர் பெண்கள். கட்டிடம், கட்டுமானம், தொழிற்சாலை, மெக்கானிக் வேலைகளில் பயிற்சி பெறுபவர்களில் 10 பேரில் 9 பேருக்கு மேல் ஆண்கள்.
இது ஏன்? சின்ன வயதிலிருந்தே பிள்ளைகள் பழைய எண்ணங்களோடு வளர்கிறார்கள். ஆண்பிள்ளைக்கு நீலம், பெண்பிள்ளைக்கு ரோஸ் என்று விளம்பரங்கள் காட்டுகின்றன. பெற்றோரும் பல நேரங்களில் தெரியாமலேயே அப்படி நடத்துகிறார்கள்.
இதன் தாக்கம் உண்மையானது. 2022-ல் நடந்த PISA ஆய்வு (பல நாட்டுப் பள்ளி மாணவர்களின் திறனைச் சோதிக்கும் ஆய்வு) ஒன்றைச் சொல்கிறது. கணக்குப் பிரச்சினையைப் பார்த்தால் சுவிஸ் பெண்பிள்ளைகள் ஆண்பிள்ளைகளை விட அதிகம் பயப்படுகிறார்கள். அதனால் தொழில்நுட்பப் படிப்புகளிலிருந்து அவர்கள் விலகிப் போகலாம்.
மறுபக்கமும் இதே கதைதான். பெண் விமானி ஆனால் கைதட்டுகிறோம். ஆனால் ஒரு பையன் குழந்தைப் பராமரிப்புத் துறைக்குப் போனால், அதற்கு அவர் காரணம் சொல்ல வேண்டியிருக்கிறது.
சட்டப்படி எல்லோருக்கும் சம வாய்ப்பு உண்டு. வோ மாநிலப் பள்ளிகள் பல ஆண்டுகளாக «எல்லா வேலைகளையும் துணிந்து முயற்சிப்போம்» (Oser tous les métiers) என்ற நாளை நடத்தி வருகின்றன. ஆனாலும் மாற்றம் மெதுவாகவே வருகிறது.
மூலம்: Le Matin
புகைப்படம்: PTTI EDU / Unsplash





