சூரிச் (Zürich) நகரில் உள்ள அல்ட்ஸ்டெட்டன் (Altstetten) ரயில் நிலையத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதனால் சூரிச் பகுதியில் ட்ரெயின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 3 மணி வரை இந்த நிலை நீடிக்கும்.
IR 35 மற்றும் IR 36 ஆகிய இரண்டு ட்ரெயின் வழித்தடங்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வழித்தடங்களில் குறைந்த அளவு ட்ரெயின்களே ஓடுகின்றன.
பல ட்ரெயின்கள் தாமதமாக வரும். சில ட்ரெயின்கள் ரத்தாகலாம். சில ட்ரெயின்கள் வேறு பாதையில் திருப்பி விடப்படலாம். இதைச் சுவிஸ் ரயில்வே நிறுவனம் (SBB) அறிவித்துள்ளது.
என்ன நடந்தது என்பது பற்றிய விவரங்களை இதுவரை அவர்கள் சொல்லவில்லை.
மூலம்: SRF
புகைப்படம்: Valomukitse Arva-Zika / Unsplash





