சுவிஸ்

பெண்களுக்கு எதிரான வன்முறை: ஸ்பெயின் வழியில் செல்லும் சுவிஸ்

பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்த, ஸ்பெயின் நாட்டின் முறையைப் பின்பற்ற சுவிஸ் விரும்புகிறது. இதற்கான தேசிய மாநாடு இன்று நடந்தது.

சுவிஸ் பெண்கள் அமைப்புகளின் மிகப் பெரிய கூட்டமைப்பு Alliance F. அவர்கள்தான் இந்த மாநாட்டை நடத்தினார்கள். சுவிஸ் மத்திய அரசின் அமைச்சர் எலிசபெத் பாம்-ஷ்னைடர் (Elisabeth Baume-Schneider) பேசினார். ஸ்பெயின் அரசின் பிரதிநிதி கார்மென் மார்ட்டினெஸ் பெர்சாவும் (Carmen Martínez Perza) வந்திருந்தார்.

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து சுவிசில் 17 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். வீட்டு வன்முறை தொடர்பாக போலீஸ் தினமும் சராசரியாக 60 வழக்குகளைப் பதிவு செய்கிறது. ஆனால் இவை புகார் கொடுத்தவர்களின் வழக்குகள் மட்டுமே என்று அமைச்சர் சொன்னார்.

ஸ்பெயினில் எல்லா அரசு அமைப்புகளும் ஒரு சங்கிலி போல இணைந்து வேலை செய்கின்றன. இதற்கென்று சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. போலீசுக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் தனிப் பயிற்சி கொடுக்கிறார்கள். வன்முறையைத் தடுப்பது முதல் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாத்து உதவுவது வரை எல்லாமே இதில் அடங்கும்.

வன்முறைக்கு எதிரான புதிய தேசிய திட்டத்தை சுவிஸ் அரசு விரைவில் வெளியிடப் போகிறது. அடுத்து மாநிலங்களுடனும் நகரங்களுடனும் சேர்ந்து வேலை செய்யப் போவதாக அமைச்சர் கூறினார். இதற்குப் பணம் முதலீடு செய்யவேண்டும் என்றும் சொன்னார். பெண்கள் தங்கும் பாதுகாப்பு இல்லங்களில் இடங்களை அதிகரிப்பதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியை வலுப்படுத்துவதும் முக்கிய இலக்குகள்.


மூலம்: RSI
புகைப்படம்: Jason Leung / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button