சுவிஸ்

டிச்சீனோ நகரங்களின் 2027 பட்ஜெட் நஷ்டத்தில் – நகரசபைகள் எச்சரிக்கை

டிச்சீனோ மாநிலத்தின் (Ticino) பெரிய நகரங்களுக்கு 2027-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் பற்றாக்குறை வருகிறது. செலவு அதிகம், வருமானம் குறைவு. இதனால் நகரசபைகள் எச்சரிக்கை மணி அடித்துள்ளன.

பெலின்சோனா (Bellinzona) நகரத்துக்கு 10 மில்லியன் பிராங்குக்கு மேல் பற்றாக்குறை வரும். லுகானோவுக்கு (Lugano) கிட்டத்தட்ட 15 மில்லியன் பிராங்க். நிலைமை சீராகும் அறிகுறி எதுவும் இல்லை.

மாநில அரசு தன் வேலைகளையும் செலவுகளையும் நகரசபைகள் மேல் சுமத்துகிறது என்று நகரசபைகள் சொல்கின்றன. தீ தடுப்பு வேலைகள், தனிப்பட்ட தகவல் பாதுகாப்புக்கான புதிய சட்டங்கள் இதற்கு எடுத்துக்காட்டு. இவற்றுக்காக கூடுதல் ஊழியர்களை எடுக்க வேண்டியிருக்கிறது. லுகானோ மேயர் சொல்வது: முன்பே பல இடங்களில் செலவைக் குறைத்து விட்டோம். இனி குறைக்க இடம் அதிகம் இல்லை.

பெலின்சோனாவில் நிலைமை இன்னும் இறுக்கம். 10 பிராங்க் செலவில் 1 அல்லது 2 பிராங்கைத்தான் நகரம் தானே முடிவு செய்ய முடியும். மீதியை மேலிடத்து விதிகள் தீர்மானிக்கின்றன. மாநில அரசின் நிலைமையும் இன்னும் மோசம் என்கிறார்கள்.

டிச்சீனோ நகரசபைகளின் சங்கம் ஒரு கோரிக்கை வைக்கிறது. வேலை கூடினால் அதிகாரமும் கூட வேண்டும். ஒரே வேலையை மாநில அரசும் நகரசபையும் சேர்ந்து செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் செலவு கூடும். அந்தச் செலவை கடைசியில் மக்களே கொடுக்க வேண்டியிருக்கும்.


மூலம்: RSI
புகைப்படம்: Silvia Marcos / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button