சுவிஸின் வாலே மாநிலத்தில் (Valais) A9 நெடுஞ்சாலையில் ஒரு கார் ஓட்டுநர் மணிக்கு 155 கி.மீ வேகத்தில் சென்றது பிடிபட்டது. அங்கே சாலைப் பணி நடந்துகொண்டிருந்தது, வேக வரம்பு 80 கி.மீ.
அக்டோபர் 5 ஆம் தேதி காலை சுமார் 11 மணிக்கு இது நடந்தது. சியர் (Sierre) – சியோன் (Sion) இடையே போலீஸ் அவரைப் பிடித்தது. அவர் 29 வயது பிரெஞ்சுக்காரர்.
அக்டோபரில் இப்படி மூன்று பேர் பிடிபட்டதாக வாலே போலீஸ் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இன்னொரு பிரெஞ்சு ஓட்டுநர் நீடர்கெஸ்டெல்னில் (Niedergesteln) 80 வரம்பில் 146 கி.மீ ஓடினார். 52 வயது சுவிஸ் ஓட்டுநர் ஒருவர் சாக்சனில் (Saxon) 60 வரம்பில் 130 கி.மீ ஓடினார்.
மூவர் மீதும் வழக்குப் பதிவாகியுள்ளது. ஒன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம். குறைந்தது 2 ஆண்டுகள் ஓட்டுநர் உரிமமும் பறிக்கப்படலாம். சாலைப் பணி நடக்கும் இடங்களில் வேக வரம்பைக் கடைப்பிடிப்பது மிக முக்கியம் என்று போலீஸ் கூறுகிறது. அங்கு வேலை செய்பவர்களுக்கு ஆபத்து அதிகம்.
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து வாலேயில் இப்படிப்பட்ட 33 வழக்குகள் பதிவாகியுள்ளன.
மூலம்: Le Matin
புகைப்படம்: Julian Hochgesang / Unsplash





