இலங்கை

விமானத்தில் ஆண் குழந்தையை பிரசவித்த இலங்கைப் பணிப்பெண்!

குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில் இலங்கை  பணிப் பெண் ஒருவர் ஆண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.

திருகோணமலையைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு பணிப்பெண்ணாகக் குவைத்திற்குச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், இன்று (19) அதிகாலை 2:52 க்கு குவைத் சிட்டி விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க நோக்கிப் புறப்பட்ட ‘ஜசீரா’ விமானச் சேவைக்குச் சொந்தமான J9-551 ரக விமானத்தில் பயணித்தபோதே இவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

விமானப் பயணங்களின் போது கர்ப்பிணிப் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய மருத்துவ வழிகாட்டுதல்கள் மற்றும் விமானச் சேவை விதிகள் உள்ள நிலையில், குறித்த பெண் தனது கர்ப்பிணி நிலையை விமான நிலைய அதிகாரிகளிடமிருந்து மறைத்துப் பயணித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான பணிக்குழாமினரின் உதவியுடன் எவ்வித சிக்கல்களுமின்றி விமானத்தினுள்ளேயே பிரசவம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இச்சம்பவம் குறித்து விமானி, கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் வழங்கியதையடுத்து, விமானம் தரையிறங்குவதற்கு முன்னரே அவசர ஆம்பியூலன்ஸ் வண்டி, மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் குழுவினர் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தரையிறங்கியதும் தாயும் சேயும் மேலதிக மருத்துவச் சிகிச்சைகளுக்காக நீர்கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் தற்போது நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button