
2026 செப்டெம்பர் 22ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியில், மன்னார் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட காணித் துண்டுகளுக்கான உரிமை, உடமை அல்லது நலன் தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
காணி உரிமைக் கோரிக்கைகளை முன்வைப்பதற்கான இறுதித் திகதி 2026 டிசம்பர் 7ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதிக்குள் உரிமைக் கோரிக்கை முன்வைக்கப்படாத சந்தர்ப்பத்தில், காணிக்கான உரிமையைத் தீர்மானிப்பதற்கான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அதற்கான தீர்மானம் அரச வர்த்தமானியில் வெளியிடப்படும் என அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர்கள் இங்குதான் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய காலம், புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் தாயகத்தில் உள்ள காணிகள், அதன் ஆவணங்கள் உங்களுடையது என்பதனை நீண்ட நாட்கள் உறுதிப்படுத்தாமலோ அல்லது அதன் தொடர்புகளும் அற்ற நிலையில் காணப்படும் நிலங்கள் குறிப்பிடப்படும் காலத்தின் பின்னர் அரசகாணிகளாக மாற்றப்பட்டு அங்கு வேறு ஒருவர் குடியமர்த்தப்படவும் வாய்ப்புக்கள் உள்ளது.
நீண்ட நாட்கள் 20, 30 வருடங்களுக்கு மேல் புலம்பெயர் தேசத்தில் வசிப்பவர்கள் உங்கள் நிலம் தொடர்பான தகவல்கள் இன்னும் இல்லையேன் அதனை விரைவாக உறுதிப்படுத்தி உங்கள் தாய் நிலத்தினை பாதுகாக்கும் படி வேண்டப்படுகின்றீர்கள்.
மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பேசாலை, நானாட்டான், துள்ளுக்குடியிருப்பு, சின்னக்கடை, புதுக்கமம் உள்ளிட்ட பகுதிகளுடன் தொடர்புடைய பல காணி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதேவேளை, வழங்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவுறுத்தல்கள் சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் காணப்படுகின்ற நிலையில், தமிழ் மொழியில் அறிவித்தல் இடம்பெறாதமை தொடர்பில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பலத்த கேள்விகள் எழுந்துள்ளன.

#அம்பாறை #மன்னார் #காணி #வர்த்தமானி





