
துபாய் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம், ஃப்ளைதுபாய் (flydubai) விமானத்தின் கேப்டன் ஸ்மித் மச்சரை நேரில் சந்தித்து தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஃப்ளைதுபாய் விமானத்தில் ஏற்பட்ட அவசரச் சூழலின் போது, சாதுரியமாகவும் துணிச்சலாகவும் செயல்பட்டு 174 பயணிகளின் உயிரைப் பாதுகாத்ததற்காக இந்த கௌரவம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின் போது ஷேக் ஹம்தான் பேசியதாவது:
“மனித உயிர்களைப் பாதுகாப்பதில் கேப்டன் ஸ்மித் மச்சர் வெளிப்படுத்திய மிகயுயர்ந்த அளவிலான துணிச்சல், பொறுப்புணர்வு மற்றும் அக்கறை பாராட்டுக்குரியது. நாட்டின் தலைமையின் சார்பிலும், நமது மக்களின் சார்பிலும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் எங்கள் குழுவின் ஒரு அங்கமாகவும், இந்த தேசத்தின் வரலாற்றின் ஒரு பகுதியாகவும் இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். அன்பு, அமைதி மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாகத் திகழும் ஐக்கிய அரபு அமீரகத்தின் உண்மையான மதிப்புகளை இவரது செயல் பிரதிபலிக்கிறது.”
சமயோசிதமாகச் செயல்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய கேப்டன் ஸ்மித் மச்சருக்குப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

#TamilNews #SwissTamilInfo #SwissTamil #ViduthalaiFM #சுவிஸ்தமிழர்தகவல்மையம் #விடுதலைfm #CaptainSmitMachchhar #SheikhHamdan #Dubai #uae





