ஜோதிடம்

இன்றைய (30.09.2026) ராசிபலன்

மேஷம்: புதிய வீடு கட்டுவது தொடர்பான அலைச்சல், டென்ஷன் வரக்கூடும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுக்க வேண்டாம். பங்குதாரரின் ஆலோசனைகளை ஏற்கவும்.

ரிஷபம்: தடைபட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு காண்பீர். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

மிதுனம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சிலர் உங்கள் உதவியை நாடுவர். முத்த சகோதரர் உங்களை புரிந்து கொள்வார். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டும் முயற்சியில் இறங்குவீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் நிம்மதியுண்டு.

கடகம்: மனக்குழப்பம் விலகும். புது சிந்தனையால் மகிழ்ச்சி அடைவீர். சேமிக்கும் அளவுக்கு பணம் சேரும். புதிய வாகனம் வாங்குவீர். குடும்பத்தில் நிம்மதி உண்டு பூர்வீக சொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

சிம்மம்: விலையுயர்ந்த கலைப் பொருட்கள் சேரும். மனைவியுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். அவருக்கு புது ஆடை ஆபரணங்களை வாங்கி கொடுப்பீர். வாகன பழுது விலகும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் அதிரடியாக செயல்பட்டு லாபமீட்டுவீர்.

கன்னி: திடீர் யோகம் உண்டாகும். வீட்டில் சுபநிகழ்ச்சி ஏற்பாடாகும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். உறவினர்கள் உங்களைப் பற்றி பெருமையாக பேசுவர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

துலாம்: வெளிவட்டாரத்தில் நிதானமாக பழகுங்கள். முன்கோபம் அதிகரிக்கும். பூர்வீக சொத்து வழக்கில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் பாக்கியை போராடி வசூலிப்பீர். ஓரளவு லாபம் பார்க்கலாம்.

விருச்சிகம்: பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் உயரதிகாரி முக்கிய விஷயங்களை பகிரும் அளவுக்கு நெருக்கமாவீர்கள். வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்.

தனுசு: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர்கள். அக்கம் பக்கத்தினருடன் இருந்த கருத்துமோதல் நீங்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

மகரம்: எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. உடன்பிறந்தோர் ஒத்தாசையாக நடந்து கொள்வார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.

கும்பம்: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். தந்தைவழியில் நிம்மதியுண்டு. மாணவர்களின் கவனம் படிப்பில் திரும்பும். வியாபார ரீதியாக பயணம் செல்வீர். அலுவலகத்தில் மதிப்புயரும்.

மீனம்: பழைய பொன், பொருளை மாற்றிவிட்டு புதிது வாங்குவீர். மனைவியின் உறவினரால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வராது என்றிருந்த பணம் வந்து சேரும். தேங்கியிருந்த சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூறாதீர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button