இலங்கைசுவிஸ்

சிறுமி மற்றும் கர்ப்பிணி தாய், தந்தை உயிர் ஆபத்தில் இருந்து காத்திட கவனயீர்ப்பு போராட்டம்.

சுவிசில் இலங்கை தமிழ் குடும்பத்தை நாடு கடத்துவதற்கு எதிராகப் பேர்ண் நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

சுவிற்சர்லாந்தில் தஞ்சம் கோரியுள்ள இலங்கை தமிழ் குடும்பம் ஒன்றை நாடு கடத்துவதற்கு எதிராகவும், மனிதநேயமிக்க அகதி நடைமுறைகளை வலியுறுத்தியும் சுவிஸின் தலைநகர் பேர்ண் (Bern) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்னணி:
இலங்கையில் அரசியல் காரணங்களால் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளான தம்பதியினர், அங்கிருந்து தப்பிச் சென்று ருமேனியாவில் பல ஆண்டுகள் முறையான உதவியின்றி மிகக் கடினமான சூழ்நிலையில் வாழ்ந்துள்ளனர். பின்னர், 2025 ஆம் ஆண்டு தங்களது மகள் அலினாவுடன் (Alina) சுவிற்சர்லாந்திற்கு வந்தடைந்தனர். தற்போது தாயார் மீண்டும் கர்ப்பிணியாகவும் உள்ளார்.

இந்தக் குடும்பத்தின் நாடு கடத்தலைத் தடுப்பதற்காக சுவிஸ் நாட்டவரான பீட்டர் ஷூட்டர் (Peter Schutter) என்பவர் இணையம் வழியாகக் கையெழுத்து வேட்டையைத் தொடங்கி, பெறப்பட்ட ஆதரவு மனுக்களின் முதற்கட்ட ஆவணங்களை சுவிஸ் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார்.

பொது மக்கள் இந்த மனுவில் கையொப்பமிட்டு ஆதரவு தெரிவிக்க விரும்பினால், கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தலாம்:

ஆதரவு தெரிவிக்க: https://share.google/TkmW4Fr96dRxfxnxK

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button