இலங்கைஉலகம்தமிழீழம்

தமிழின அழிப்பு வரலாற்றை மறைக்க முடியாது: பிரம்ரன் நகரபிதா கடும் கண்டனம்!

 

பிரம்ப்டன் (கனடா):

சிறிலங்கா அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட திட்டமிடப்பட்ட இனப்படுகொலை வரலாற்றை உலகத்தில் இருந்து ஒருபோதும் மறைக்க முடியாது என்றும், வரலாற்று நினைவுகளை அழிக்க முயலக் கூடாது என்றும் கனடாவின் பிரம்ரன் (City of Brampton) நகரபிதா பற்றிக் பிரவுண் (Patrick Brown) அவர்கள் மிகக் காட்டமாகத் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் உடைக்கப்பட்டதற்கு எதிராக கனடாவில் அமைக்கப்பட்டுள்ள ‘முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு’ முன்பாக நின்று உரையாற்றியபோதே அவர் தனது இறுக்கமான கண்டனத்தைப் பதிவு செய்தார்.

யாழ் நல்லூர் வீதியில் வைக்கப்பட்டிருந்த லெப் கேணல் தியாக தீபம் திலீபன் அவர்களின் சிலையினை சிறிலங்கா காவல்துறை அகற்றியமை போன்ற தொடர்ச்சியான அடக்குமுறைகளுக்கு எதிராகவே அவர் குரல் கொடுத்துள்ளார்.

அவர் தனது உரையில்
சிறிலங்கா அரசானது அரசானது 1958 ஆண்டு படுகொலையில் (pogrom) ஆரம்பித்து 1993 கறுப்பு யூலை, பின்னர் தொடர்ச்சியாக 2009 முள்ளிவாய்க்கால் (Macassar or Makassar) தமிழின அழிப்பின் அதி உச்சமான ஒரு பேரழிவு கொடூரத்தை நிகழ்த்தியது

தமிழின அழிப்பின் தொடர்ச்சியாக, தமிழ் மக்களின் கலாச்சாரத்தைப் பேணுதல், வரலாற்றைப் பாதுகாத்தல் மற்றும் தங்களின் உறவுகளை நினைவுகூரும் அடிப்படை உரிமைகளைக் கூட தடுத்து, திட்டமிட்ட இன அழிப்பை சிறிலங்கா அரசு தற்போதும் முன்னெடுத்து வருகிறது எனவும்.

சிறிலங்கா அரசாங்கம் செய்த படுகொலைகள், கொடூரக் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை பற்றி உலகத்திற்கு மிக நன்றாகவே தெரியும். தமிழர்களின் எஞ்சியிருக்கும் வரலாறுகளையும் நினைவுகளையும் அழிக்க சிறிலங்கா அரசு முயற்சி செய்யக் கூடாது எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசு மறைக்க நினைக்கும் வரலாற்று உண்மைகளையும் தமிழர்களின் தியாகங்களையும் உலகிற்குத் தொடர்ச்சியாக நினைவூட்டவே கனடாவில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

தமிழின அழிப்பை அரங்கேற்றிவிட்டு உல்லாச வாழ்க்கை வாழும் சிறிலங்கா அரசாங்கத்திற்குத் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்த நகரபிதா பற்றிக் பிரவுண் அவர்கள், தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளுக்கும் இனப்படுகொலைக்கும் எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button