தமிழீழம்

வவுனியா வெடுக்குநாறிமலையில் புத்தர் சிலையுடன் வழிபாடு! சிவனை வழிபடச்சென்றவர்களுக்கு விசாரணை

வெடுக்குநாறிமலையில் சிவனை வழிபடச்சென்ற சைவ மக்கள் மீது பொலிசார் மேற்கொண்ட அடாவடியால் இன்றைய தினம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
வெடுக்குநாறிமலையில் ஆதிசிவனுக்கான புரட்டாதி சனி விரத வழிபாடுகளை சைவ மக்கள் இன்றைய தினம் மேற்கொண்டு வருகின்ற நிலையில், பௌத்த மக்களும் பெருமளவில் அங்கு வருகை தந்து, புத்த பெருமானின் சிலையொன்றை மேசையில் வைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
ஆதிசிவனை தரிசிக்க சென்ற மக்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு கெடுபிடிகளில் ஈடுபட்டனர்
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், த.ரவிகரன், ப.சத்தியலிங்கம், சிவஞானம் சிறீதரன் ஆகியோரும் அங்கு பிரசன்னமாகி தமிழ் மக்களுக்கான உரிமைக்காக குரல் கொடுத்திருந்தனர்.
பலபோராட்டங்களின் மத்தியில் தமிழ் மக்கள் வழிபாட்டினை நடாத்தி முடித்திருந்தனர்
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button