தமிழீழம்

யாழ்.பல்கலை மாணவர்களின் உணவுதவிர்ப்பு போராட்டம் – விசாரணைக்குட்படுத்திய பொலிஸ்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 12 நாள்கள் அஹிம்சை வழியில் உண்ணாநோன்பிருந்து தன்னுயிரைத் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது

 

தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் தாயகமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தியாக தீபத்தின் நினைவைப் போற்றும் வகையில் இடம்பெறவுள்ள இந்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் பல்கலை மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர் .

அதேவேளை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை அவ்விடத்திற்கு முச்சக்கர வண்டியில் வருகை தந்த பொலிஸார் மாணவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு   சென்றனர்

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button