இலங்கை

விளையாட்டுப் போட்டிகளில் மதுபானம், போதைப்பொருட்களுக்கு முற்றாகத் தடை

பாடசாலையின் இலச்சினையைப் (Logo) பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு நிகழ்விலும் போதைப்பொருட்களை விளம்பரப்படுத்துவதும், பயன்படுத்துவதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வாக்குறுதியளிக்கப்பட்டவாறு அத்தகைய விழாக்களை உடனடியாகத் தடை செய்வதற்கு, கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட 2026/10 இலக்கச் சுற்றறிக்கையின் மூலம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயல்பாட்டுத் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் இணைப்பாடவிதான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக் கிளையின் பிரதிப் பணிப்பாளர் மகேஷ் ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

பிரபல பாடசாலைகளில் நடைபெறும் ‘பிக் மேட்ச்’ (Big Match) எனப்படும் பெரும் கிரிக்கெட் போட்டிகளின் போது மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவதாகப் பெற்றோர்களிடமிருந்து தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இதற்கமைய, பாடசாலை இலச்சினையுடன் நடத்தப்படும் எந்தவொரு நிகழ்வும் பாடசாலை விழாவாகக் கருதப்படும் என்றும், இனிவரும் காலங்களில் மதுபானம் அல்லது போதைப்பொருள் பயன்பாடு முற்றாகத் தடை செய்யப்படும் என்றும் பிரதிப் பணிப்பாளர் வலியுறுத்தினார்.

மேலும், இந்தத் தீர்மானத்தைக் கடுமையான முறையில் கண்காணிப்பதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“குறிப்பாக நாம் அனைவரும் அறிவோம். பிரபல பாடசாலைகளில் நடைபெறும் ‘பிக் மேட்ச்’ கிரிக்கெட் போட்டிகளின் போது பிள்ளைகள் போதைப்பொருள் பயன்பாட்டிற்குச் சென்றதாகப் பெற்றோர்களிடம் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதனால் நாம் வெளியிட்ட 2026/10 சுற்றறிக்கை மூலம் பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்தும், இலச்சினையைப் பயன்படுத்தும் எந்தவொரு நிகழ்விலும் போதைப்பொருளை விளம்பரப்படுத்துவது முற்றாகத் தடை செய்யப்படுகிறது. அது தீவிரமாகக் கண்காணிக்கப்படும். பாடசாலையின் இலச்சினையைப் பயன்படுத்தி நடத்தும் விழா பாடசாலையின் விழாவாகும். அத்தகைய விழாவில் எந்தவொரு போதைப்பொருளும் பயன்படுத்தப்படக் கூடாது. அந்தச் சுற்றறிக்கையின்படி, அந்த நேரத்தில் அந்த விழாவைத் தடை செய்யக் கல்விச் செயலாளருக்கு அதிகாரம் உள்ளது.” என்றார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button