இலங்கை

வீட்டின் மீது சரிந்த மண்மேடு; குடும்பத்தினர், நான்கு பேர் பரிதாபமாகப் பலி

கினிகத்தேனை, பொல்பிட்டிய பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் விபத்துக்குள்ளாகி காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட இந்த மண்சரிவு அனர்த்தத்தில், வீட்டிலிருந்தவர்கள் மண்ணுக்குள் புதையுண்டு காணாமல் போயிருந்தனர்.
பொலிஸார், இராணுவத்தினர், அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் மற்றும் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட தீவிர மீட்புப் பணிகளின் போது, காணாமல் போன நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button