இலங்கை

இலங்கையில் டெங்கு மரணம் நாளுக்கு நாள் அதிகரிப்பு – 62 ஆக உயர்வு

இலங்கையில்  பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

இந்த ஆண்டின் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 84,724 ஆக உயர்ந்துள்ளதாக அப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதன்படி, ஜூலை மாதத்தில் நேற்று (30) வரை பதிவாகியுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 29,350 ஆகும்.

 

இவ்வாண்டின் இதுவரை கம்பஹா மாவட்டத்தில் 17,971 நோயாளிகளும், கொழும்பு மாவட்டத்தில் 16,814 நோயாளிகளும், கண்டி மாவட்டத்தில் 5,873 நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 44,829 ஆகும்.

 

தென் மாகாணத்தில் 12,738 நோயாளிகளும், மத்திய மாகாணத்தில் 7,370 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button