
ஜோர்டானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க போர் விமானங்களை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), தாக்கியதாக ஈரான் அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஈரான் அரச ஊடகங்களின் தகவலின்படி, ஜோர்டானின் அஸ்ராக் (Azraq) இராணுவத் தளத்தில் இருந்த அமெரிக்க இராணுவத்தின் தொடர்பு அமைப்புகள் மற்றும் எரிபொருள் சேமிப்பு தொட்டிகள் இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜோர்டான் இராணுவம், தங்கள் நாட்டை நோக்கி வந்த மூன்று ஈரானிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது.
மேலும், குவைத்தில் அமெரிக்கப் படைகள் மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற போராளிகள் இருப்பதாகக் கூறப்படும் பல இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில், HIMARS (High Mobility Artillery Rocket System) ஏவுகணை அமைப்புகள் மற்றும் ஏவுகணைகள் அழிக்கப்பட்டதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
IRGC வெளியிட்ட அறிக்கையில், இந்தத் தாக்குதல்களில் “புரட்சிக்கு எதிரான பலர் மற்றும் அமெரிக்க சிறப்புப் படையினர் பலர் கொல்லப்பட்டுள்ளனர். பதிலடித் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” எனக் கூறப்பட்டுள்ளது.





