
‘J செய்தது போன்று எல்லா சொத்துக்களையும் பெண்களுக்கு கொடுங்கள்’ என்ற கோரிக்கையுடன் வெளிநாட்டவர் ஒருவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் வினோத கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று முன்னெடுத்துள்ளார்.
தமிழர் கலாசாரப்படி உடையணிந்து பதாகைகளை தாங்கியபடி இந்த போராட்டதை முன்னெடுத்து வருகிறார். குறித்த நபரை பொதுமக்கள் விசித்திரமாக பார்த்துச் சென்றமையை அவதானிக்க முடிந்தது. அத்துடன் பொலிசாரும் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.









