இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்;காயமடைந்த மேலுமொரு அதிகாரி உயிரிழப்பு

பலி எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதலில் படுகாயமடைந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர், இலங்கை தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  உயிரிழந்துள்ளார்.

கலவரத்திற்குப் பின்னர் அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை அவர் உயிரிழந்தார்.

இந்த புதிய உயிரிழப்புடன், நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது என சிறைச்சாலை திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.இதில் 8 அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவலின்படி, காயமடைந்தவர்களில் 12 பேர் தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button