உலகம்

வெனிசுலா நிலநடுக்கம்; கட்டிட இடிபாடுகளிலிருந்து வாலிபர் உயிருடன் மீட்பு

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த 24 ஆம் திகதி அன்று அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளன. தலைநகர் கராகஸ் மற்றும் லா குவைரா ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் நொடிப் பொழுதில் விழுந்து தரைமட்டமாகின.

 

 

 

 

 

தற்போதைய அதிகாரப்பூர்வத் தகவலின்படி, இந்த கோர விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 1,719-ஐ கடந்துள்ளது. மேலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகின்றனர். சுமார் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

 

 

 

 

 

உயிருடன் மீட்பதற்கான 72 மணி நேரக்கெடு முடிந்த பின்னரும், 27 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்வதேச மீட்புக் குழுவினர் மோப்ப நாய்களுடன் இரவு, பகலாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

 

இந்த நிலையில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த மோப்ப நாய் ஒன்று ஒரு குறிப்பிட்ட இடிபாட்டின் கீழ் சிக்னல் கொடுத்தது. உடனே மீட்புப் படையினர் அங்குள்ள இரும்பு மற்றும் சிமெண்டு கற்களை அகற்றிப் பார்த்தபோது, 6 நாட்களாக உயிருக்குப் போராடி கொண்டிருந்த அந்த வாலிபரை கண்டுபிடித்து மீட்டனர்.

 

 

 

அதேபோல், மற்றொரு இடிபாட்டில் சிக்கிய இருந்த நாய் குட்டியும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்துள்ளன. இதனால் நாட்டின் மசகு எண்ணெய் வினியோக கட்டமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இடிபாடுகளில் சிக்கிய இருந்த 33-க்கும் மேற்பட்டோர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளதாக ஐ.நா. ஆதரவு மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த நெஞ்சை உலுக்கும் பேரழிவிற்கு இடையிலும், அடுத்தடுத்து நிகழும் இந்த அதிசய மீட்புகள் அங்குள்ள மக்களிடையே ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button