உலகம்

வெனிசியுலா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை1,430ஆக உயர்வு

தென் அமெரிக்க நாடான வெனிசியுலாவின் வடக்கு கடலோரப்பகுதியில் நேற்று முன்தினம் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மோரோன் பகுதியை மையமாக வைத்து ரிச்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆக அடுத்தடுத்து பதிவான இந்த இரட்டை நிலநடுக்கங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கின.

 

 

 

வரலாறு காணாத பேரிடரால், ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் அன்று இரவில் அவசரநிலைப் பிரகடனம் செய்தார். சேதமடைந்த வைத்தியசாலைகள் மற்றும் வீடுகளுக்காக 200 மில்லியன் (சுமார் ரூ.2,000 கோடி) அமெரிக்க டொலர் புனரமைப்பு நிதியை அரசாங்கம் ஒதுக்குவதாக அறிவித்தார்.

 

 

 

இந்த பேரிடரில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 1,430 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. லா குவைரா மற்றும் கராகஸின் சில பகுதிகளில் மீட்புக் குழுவினர் பரவலாக தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த திருத்தப்பட்ட பலி எண்ணிக்கை வெளியாகி உள்ளது.

 

 

 

 

 

நிலநடுக்கங்களைத் தொடர்ந்து அமெரிக்கா வெனிசியுலாவுக்கு உதவி அனுப்பியுள்ளது. ட்ரம்ப் நிர்வாகம் ஏற்கனவே உறுதியளித்துள்ள 150 மில்லியன் டாலர்களுக்குக் கூடுதலாக, நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள நிதித் தொகுப்பு அடுத்த ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று (சனிக்கிழமை) தெரிவித்தார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button