
கற்பிட்டி கடற்பரப்பில் சோதனை நடவடிக்கைக்குச் சென்ற இலங்கை பொலிஸ் குழுவிற்கும் அங்கு கடமையில் இருந்த விமானப்படை உறுப்பினர்களுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றமான நிலைமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருட்கள் அடங்கிய தொகுதியை கைப்பற்றும் நோக்கில் பொலிஸ் குழுவொன்று குறித்த பகுதிக்கு சென்றுள்ளது.
அப்போது அங்கு பணியில் இருந்த விமானப்படை உறுப்பினர்கள், அந்தப் பகுதி தங்களது கட்டுப்பாட்டுக்குட்பட்ட வலயம் என தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





