
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவின் உடல்நிலை குறித்து உடனடி கவனம் செலுத்துமாறு சர்வஜன அதிகாரம் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அந்தக் கடிதத்தில், சுரேஷ் சலேவின் உடல்நிலை மோசமடைந்து வருவதாகக் கவலை வெளியிடப்பட்டுள்ளதுடன், மனிதாபிமான அடிப்படையிலும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் நோக்கிலும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
மேலும், தடுப்புக் காவலில் உள்ள நபரின் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் பொறுப்பு என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.





