இலங்கை

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக போராட்டம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று (08) காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

 

 

 

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், சுரேஷ் சலேவை விடுதலை செய்யுமாறு கோரியதுடன், அவரது கைது மற்றும் தடுப்புக் காவலை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

 

 

 

இதன்போது கருத்து தெரிவித்த பெங்கமுவே நாலக தேரர், நாட்டுக்காக சேவையாற்றிய சுரேஷ் சலேவை சிறையில் அடைத்திருப்பதாகவும், அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்தும் கருத்து வெளியிட்டார்.

 

 

 

ஆர்ப்பாட்டத்தில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button