
தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இவ்வருடத்திற்கான கருப்பொருளாக “பொது நன்மைகளுக்காக நாம் விரைவாக அணிதிரள்வோம்” என்பதக அமைந்துள்ளது.
பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஜி. செனரத்ன குறிப்பிடுகையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் பங்களிப்புடன் மாத்தறை, திஹகொடவில் உள்ள மிடெல்லவெல புராண விகாரையில் தேசிய வெசாக் விழா இன்று பிற்பகல் நடைபெறும் எனத் தெரிவித்தார்
.வெசாக் காலத்தில் பொதுமக்கள் நற்பண்புகளை கடைப்பிடிப்பதற்கும், சமய வழிபாடுகளுக்கு (பிரதிப்பத்தி பூஜை) முன்னுரிமை அளிப்பதற்கும் பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.





