இலங்கை

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து திட்டம்

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டமொன்றை காவல்துறை அறிவித்துள்ளது.

 

பெருநாள் தினத்தில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை மையப்படுத்தி இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஹஜ் பெருநாள் விசேட தொழுகைகள் நடத்தப்படும் பள்ளிவாசல்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசேடமாக காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

 

அத்துடன், மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் ஏற்படக்கூடிய வாகன நெரிசல்களைக் கட்டுப்படுத்தி, சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக விசேட போக்குவரத்துத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button