
ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் பெற்றோலிய உற்பத்திகளுக்கான தற்காலிக தடை விலக்கை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்க அமெரிக்கா இன்று அனுமதி அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச எரிசக்தி சந்தைகளை நிலைப்படுத்துவதற்காக கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ரஷ்ய எண்ணெய் மீதான இந்த தற்காலிக தடை விலக்கை, ட்ரம்ப் நிர்வாகம் நீடிக்காது என்று அமெரிக்க திறைச்சேரி செயலாளர் கடந்த புதன்கிழமை(15) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





