இலங்கை

யாழில் ஒரே நேரத்தில் நான்கு வீடுகள் மீது தாக்குதல்!

யாழில் ஒரே நேரத்தில் நான்கு வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்குக் கட்டைக்காடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு (15-04-2026) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் நபர் ஒருவரால் நான்கு வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அந்த நபர், வீட்டின் உடமைகள், கண்ணாடி மற்றும் தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளார்.

குறித்த நபர் அப்பகுதியில் பல நாட்களாகக் குடும்பங்களை அச்சுறுத்தி வருவதாகவும் அருகில் வசிக்கும் குடும்பங்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை தோன்றியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரை உடனடியாகக் கைது செய்யுமாறு மருதங்கேணி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் முறைப்பாடு அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button