இலங்கை

A/L பரீட்சைப் பெறுபேறு புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடப்படும் – பரீட்சைகள் ஆணையாளர் நம்பிக்கை

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டுக்கு முன்பு வெளியிடக்கூடியதாக இருக்குமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

 

பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான செயல்முறைகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

 

நவம்பர் 10ஆம் திகதி ஆரம்பமான உயர்தர பரீட்சையின் சில பாடங்கள் தித்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு ஜனவரி 12 முதல் 20 வரை மீண்டும் நடத்தப்பட்டன. இதற்கமைய அனைத்து பரீட்சைகளும் 16ஆம் திகதி நிறைவடைந்தன.

 

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சுமார் மூன்று இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button