இலங்கை

கடல்வழி கடத்தலுக்கு முற்றுப்புள்ளி: 96 பில்லியன் ரூபாவுக்கும் அதிக போதைப்பொருட்கள் மீட்பு – கடற்படை அதிரடி!

சர்வதேச கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதே கடற்படையின் பிரதான பணியாகும் என கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.

 

கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி மலைக்க வைக்கிறது.

2025 ஆம் ஆண்டில் ஹெரோயின், ஐஸ் மற்றும் கொக்கைன் ஆகிய மூன்று வகை போதைப்பொருட்கள் மட்டும் சுமார் 71 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

2026 ஆம் ஆண்டில் (இதுவரை) சுமார் 25 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்கள் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் கடந்த 15 மாத காலப்பகுதிக்குள் சுமார் 96 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய போதைப்பொருள் விநியோகம் முறியடிக்கப்பட்டுள்ளது.

 

கடத்தல்காரர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ள கடற்படை, இந்த ஆண்டில் இதுவரை 9 பலநாள் கடற்றொழில் படகுகள் மற்றும் 49 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த ஆண்டில் 13 பலநாள் கடற்றொழில் படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

இதேவேளை போதை மாத்திரைகள், கஞ்சா மற்றும் சட்டவிரோத வெளிநாட்டுச் சிகரெட்டுகளைக் கடத்திய 123 படகுகள் இதுவரை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

எதிர்காலத்தில் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிவித்த ஊடகப் பேச்சாளர், எக்காரணம் கொண்டும் கடத்தல்காரர்கள் நாட்டிற்குள் போதைப்பொருட்களைக் கொண்டு வருவதற்கு இடமளிக்கப்போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button