
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஒவ்வொரு நாடும் தங்களுக்கான நிலைமையை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
இந்தநிலையில், இலங்கை அரசாங்கமும், நாட்டின் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு பல்வேறு செயற்பாடுகளை உடன் அமுலாகும் வகையில் செயற்படுத்தி வருகின்றது.
ஒரே மாதத்திற்குள் எரிபொருள் விலையை இரண்டு தடவைகள் அதிகரிக்க நிர்பந்திக்கப்பட்டமையால், ஏனைய அனைத்து துறைகளும் பாரிய நெருக்கடியை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஒரே மாதத்திற்குள் எரிபொருள் விலையை இரண்டு தடவைகள் அதிகரிக்க நிர்பந்திக்கப்பட்டமையால், ஏனைய அனைத்து துறைகளும் பாரிய நெருக்கடியை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனை சமநிலைப்படுத்தும் முகமாக, ஒவ்வொரு துறைகளுக்குமான கட்டண அதிகரிப்பை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து, நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்துக் கட்டணங்கள் 12.19 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை திருத்தத்தைத் தொடர்ந்து, குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் 27 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இரண்டாயிரத்து 159 ரூபாயாக இருந்த அதிகபட்சக் கட்டணம் 263 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய கட்டணமாக இரண்டாயிரத்து 422 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று முதல் வழக்கம் போல் பேருந்துச் சேவைகள் மீண்டும் முன்னெடுக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணங்க, முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.





