உலகம்

உக்ரைனுக்கு ஏவுகணை பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

மத்திய கிழக்கில் நடைபெறும் போரின் காரணமாக உக்ரைனுக்கு ஏவுகணை பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி விலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஈரானுடனான இஸ்ரேல்–அமெரிக்க போர் நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறார் என ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

அது உக்ரைனை பலவீனப்படுத்துவதோடு, அமெரிக்காவின் ஆதரவு மற்றும் வளங்களையும் வேறு திசைக்கு திருப்பும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

“புடினுக்கு, ஈரானில் நீண்டகால போர் ஒரு நன்மை. இது எரிசக்தி விலைகளை பாதிப்பதோடு, அமெரிக்காவின் ஆயுத கையிருப்பையும், வான்வழி பாதுகாப்பு உற்பத்தியையும் குறைக்கிறது. இதனால் நமக்கும் வளங்களின் பற்றாக்குறை ஏற்படுகிறது” என ஜெலன்ஸ்கி மேலும் கூறியுள்ளார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button